ஓசூர் பி.எம்.சி டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
ஓசூர் இன்ஜினியர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான பணிநியமன ஆணை வழங்கும் விழா பி.எம்.சி டெக் கல்வியின் நிறுவனத்தின் தலைவர் பெ.குமார் தலைமையில் நடைபெற்றது.அவர் தலைமையேற்று பேசுகையில்,” மாணவர்கள் தொழில் முனைவோர்களாக வரவேண்டும். அதற்கு ஏராளமான மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் இருக்கின்றன.அவற்றை பயன்படுத்தி புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும். மாணவர்கள் வேலை பெறுபவர்களாக இல்லாமல் மற்றவர்களுக்கு வேலை தருபவர்களாக வளரவேண்டும்,”என்று பேசினார். விழாவில் பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் செயலாளர் பெ மலர், இயக்குநர்.பேராசிரியர் சுகாதரன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் ஓசூர் மனிதவள ஆலோசகர் நாகராஜன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில், “பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றச் செல்லும் மாணவர்கள் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றங்களை அறிந்து அதற்கேற்ப தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் என்றும் மறவாமல் அவர்களின் வழிகாட்டுதலை மதித்து பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கண்ட கனவை நனவாக்கும் இளைய தலைமுறையாக திகழ வேண்டும்,” என்று பேசினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஓசூர் மிண்டா கம்பெனியின் மனித வள மேம்பாட்டு தலைவர் ராஜேஷ் குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையில்,.” இன்றைக்கு கல்லூரி வளாகத்திலேயே மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. முன்பெல்லாம் வேலை தேடி மாணவர்கள் தொழிற்சாலைகளின் வாசலில் காத்திருந்த காலம் இருந்தது. பணி நியமன ஆணைகள் எளிதில் கிடைத்து விட்டது என்று மாணவர்கள் நினைக்க வேண்டாம். கிடைத்த வேலையை நன்றாக பயன்படுத்தி சிறப்பாக பணியாற்றினால் பதவி உயர்வு உங்களைத் தேடி வரும்.நீங்கள் செய்யும்பணியில் ஆர்வம், அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு இருந்தால் வாழ்வில் உங்கள் லட்சியங்களை நிச்சயம் அடையலாம்.” என்று பேசினார்.
இறுதி ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு 35 தொழில் நிறுவனங்களின் 474 பணி நியமன ஆணைகளை இந்த விழாவில் வழங்கப்பட்டது. ஏராளமான மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வருகை தந்து பல்வேறு முன்னணி தொழிற்சாலைகளுக்கான பணி ஆணைகளை பெற்றுக் கொண்டனர். பி. எம்.சி டெக் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் கேப்டன் சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்.பாலிடெக்னிக் கல்லூரியின் பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.
Annual Day Celebration 2020
ஓசூர் பி.எம்.சி டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்.
ஓசூர் பெருமாள் மணிமேகலை ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் பிஎம்சி டெக் கல்வி நிறுவனத் தலைவர் பொறியாளர் பெ.பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் பெ.மலர், செயலாளர் பெ.குமார், ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர் பேராசிரியர் ந. சுதாகரன், பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ். சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஓசூர் டேப் இந்தியா கம்பெனியின் துணை பொது மேலாளர் வி. நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில், மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை அரங்கேற்ற ஆண்டு விழா பெரிதும் பயன்படுகிறது, பன்முக ஆற்றல் கொண்ட மாணவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி வாகை சூடுகிறார்கள், வருங்கால இந்தியா எழுச்சிமிக்க இந்த இளைஞர்களை நம்பித்தான் இருக்கிறது இளைஞர்களின் கனவு நாயகன் அப்துல் கலாமின் வாழ்க்கை சோதனைகளும் சாதனைகளும் நிறைந்தது அவரின் அறிவுரைகளை இதயத்தில் ஏந்தி வாழ்க்கையில் வெற்றி சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன், என்று பேசினார்.
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் நா. பாலசுப்பிரமணியம் மற்றும் ஐடிஐ முதல்வர் வி. பாபு ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர், தமிழக அரசு நடத்திய வாரியத் தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் ஆண்டு விழா மேடையில் வழங்கப்பட்டன, மேலும் பி.எம்.சி டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வி மற்றும் கல்வி சார்ந்த பிற செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய வேதி பொறியியல் துறை பயிலும் வி.சக்தி என்ற மாணவருக்கு கல்லூரியின் சிறந்த மாணவருக்கான விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது, இந்த ஆண்டு விழாவில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை பி.எம்.சி டெக் கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் பேராசிரியர் விஜயகுமார் செய்திருந்தார்.
Corona Virus Awareness Program
ஓசூர் பி.எம்.சி டெக் கல்வி நிறுவனங்களில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
ஓசூர் பி.எம்.சி டெக் Er. பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் கரோனா வைரஸ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் தலைவர் பொறியாளர் திரு P.பெருமாள் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியை ஓசூர் காவேரி மருத்துவமனை மற்றும் சூளகிரி சுகாதாரத்துறை ஆய்வாளர் கலந்து கொண்டு கரோனா வைரஸ் தொற்று எதனால் ஏற்படுகிறது, அதன் ஆரம்ப அறிகுறி என்ன, நோய் தடுப்பு முறைகள் என்ன என்பது குறித்தும், கை கழுவும் முறைகள் குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இவ்விழாவில் பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் திருமதி. மலர் துவக்கி வைத்தார். பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் செயலாளர் திரு. குமார், பி.எம்.சி டெக் ஐடீஐ மற்றும் பாலிடெக்னிக் இயக்குனர் திரு. N. சுதாகரன், பொறியியல் கல்லூரி முதல்வர் திருமதி S. சித்ரா, பாலிடெக்னிக் முதல்வர் திரு. N. பாலசுப்ரமணியம், அனைத்து துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை YRC, NSS, NCC ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர்.
World Kidney Day
உலக சிறுநீரக தினத்தை (12 மார்ச்) முன்னிட்டு ஓசூர் *காவேரி மருத்துவமனையுடன்* இணைந்து *ஓசூர் பி.எம்.சி டெக் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில்* தண்ணீரின் அவசியத்தை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓசூர் பி.எம்.சி டெக் Er. பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் சிறுநீரக தினம் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் தலைவர் பொறியாளர் திரு P.பெருமாள் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியை ஓசூர் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு சிறுநீரகத்தை எவ்வாறு பாதுகாப்பாக கொள்வது என்பதை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஆற்றினார்கள். இதுகுறித்து டாக்டர் அரவிந்தன் கூறுயில், சிறுநீரக பிரச்னை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு குறைவாக உள்ளது, சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் ஆரம்ப நிலையில் தெரியாது.
இதனால், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, நோய் முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆரம்ப நிலையிலேயே முறையான சிகிச்சை பெற்றால் சிறுநீரகத்தில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் இருந்து தடுக்க முடியும்’ என்றார்.
இவ்விழாவில் பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் திருமதி. மலர் துவக்கி வைத்தார். பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் செயலாளர் திரு. குமார், பி.எம்.சி டெக் ஐடீஐ மற்றும் பாலிடெக்னிக் இயக்குனர் திரு. N. சுதாகரன், பொறியியல் கல்லூரி முதல்வர் திருமதி S. சித்ரா, பாலிடெக்னிக் முதல்வர் திரு. N. பாலசுப்ரமணியம், அனைத்து துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் 3000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
Mechanical students visited machine tool exhibition (IMTEX 2020)
Mechanical Dept 175 students Visited IMTEX 2020 Exhibition Bangalore on 27/01/2020.
National Level Technical Symposium 2020
National level technical symposium held on 06/06/2020 with participants of more than 50 students from 19 different polytechnic colleges
Hosur PMC Tech Group of institution celebrates India’s 71st Republic Day
An event is not over until everyone is tired of talking about it!
Er.Perumal Manimekalai Polytechnic College proudly presents the
National Level Technical Symposium ChromeFest 2K20
Dates For
EEE, ECE & CSE : 05.02.2020
Mechanical : 06.02.2020
Mech (Tool & Die) & E (Robotics) : 07.02.2020
Chemical & Civil : 08.02.2020
Venue :PMC TECH Auditorium
Technical Events: Paper Presentation
The last date for Registration and Abstract submission is upto 03/02/2020.
Mail id for abstract submission: pmctechsymposium2020@gmail.com
For Online Registration :
Website link : http://shorturl.at/ghjt9
For further details contact:
Mr. R Ramachandran
HOD/T&D
9942251517
Mr. N Anand
HOD/EEE
9842683935
Push yourself, because no one else is going to do it for you.